மதுரை:தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு தொடங்கிஉள்ளது.பாலமேடு மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆண்டுதோறும் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நடைபெறும். அதேபோல இன்று கரோனா காட்டுப்பாடுகளுடன் போட்டி தொடங்கியது.
ஆன் லைன் மூலமாகப் பதிவு செய்து தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். 700 காளைகள் பங்கேற்றுள்ளன. முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கும் கரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாய பெறப்பட்டது.
வாடிவாசலில் போட்டியில் கலந்து கொள்ளக் கூடிய காளைகளின் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குறைந்தளவு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.