தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திறந்த வெளியில் மழையில் நனையும் நெல் மூட்டைகள்! - madurai news

மதுரை அருகே அரசியல் முதல் கிடங்கில் திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனையும் சேதமடைந்தன.

திறந்தவெளியில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் - கொள்முதல் கிடங்கின் அவலம்
திறந்தவெளியில் மழையில் நனையும் நெல் மூட்டைகள் - கொள்முதல் கிடங்கின் அவலம்

By

Published : Jun 7, 2021, 10:27 PM IST

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருமங்கலம் பகுதிகளில் இரண்டு நாள்களாக வெப்பசலனம் காரணமாக மழை பெய்தது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்புக் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து, தமிழ்நாடு முழுவதும் அரசு நியாயவிலை கடைகளுக்கு அரிசியாக மாற்றப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்படுகின்றன.
தற்போது, கிடங்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மூடி பாதுகாக்கப்படாமல் மேற்கூரை இன்றி திறந்தவெளியில் பாதுகாப்பின்றி இருப்பதோடு பெய்யும் மழையில் ஏராளமான நெல்மூட்டைகள் நனைந்தன. இதனால், நெல்மூட்டைகளில் பூஞ்சைகள் உருவாகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையால் வீணாவதை தடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: தொழில்நுட்பத்தால் மருத்துவ சேவை மேம்படும் - கருத்தரங்கில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details