தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... மதுரையில் நக்கீரர் அவதாரம் எடுத்த ப. சிதம்பரம் - P. chidambaram become nakkirar in madurai

மதுரை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் பிறந்தநாளையொட்டி மதுரை காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை நக்கீரர் போன்று உருவகம் செய்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

p chidambaram

By

Published : Sep 16, 2019, 11:00 PM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நீதிமன்றக் காவல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் செப்டம்பர் ஐந்தாம் தேதி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று ப. சிதம்பரத்தின் 74ஆவது பிறந்தநாளாகும். இதனைக் கொண்டாடும் விதமாக மதுரை காங்கிரஸ் நிர்வாகிகள் ப. சிதம்பரத்தின் உருவத்தை நக்கீரர் போன்று கிராஃபிக்ஸ் செய்து அதனை சுவரொட்டியாக மதுரை நகர் முழுவதிலும் ஒட்டியுள்ளனர்.

மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

அதுமட்டுமல்லாது அந்த சுவரொட்டியில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... ஜிடிபி 5 சதவீதம் வீழ்ச்சி... கலியுக நக்கீரரே என்றெல்லாம் வாசகங்களும் பதிவிட்டுள்ளனர். இந்த போஸ்டரைக் கண்ட சிலர் அதிலிருக்கும் வாசகம் யாருக்காக சொல்லப்பட்டிருக்கிறது என்று நகைத்துச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details