தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மாவட்டங்களுக்கான 2ஆவது ஆக்ஸிஜன் ரயில் இன்று வந்தது - corona

மதுரை: தென் மாவட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் இரண்டாவது ஆக்ஸிஜன் ரயில் வாடிப்பட்டிக்கு இன்று வந்தடைந்தது.

தென் மாவட்டங்களுக்கான 2-வது ஆக்ஸிஜன் ரயில் இன்று வந்தது
தென் மாவட்டங்களுக்கான 2-வது ஆக்ஸிஜன் ரயில் இன்று வந்தது

By

Published : May 21, 2021, 6:33 PM IST

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தியன் ரயில்வேயும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனைச் சிறப்பு ரயில்கள் மூலம் கொண்டு வந்து உதவி செய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கான இரண்டாவது ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டிக்கு இன்று வந்து சேர்ந்தது.

இந்த ரயில் திண்டுக்கல் வழியாக வாடிப்பட்டி வந்தடைந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 79.30 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கான 2ஆவது ஆக்ஸிஜன் ரயில் இன்று வந்தது
"ரோல் ஆன் - ரோல் ஆப்" (Roll On - Roll Off) முறையில் ஆக்ஸிஜன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த டேங்கர் லாரிகள் சாலைகளில் ரோல் ஆன் ஆகவும்; ரயிலில் ஏற்றப்பட்ட பிறகு ரோல் ஆப் ஆகவும் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் இதுவரை 728.71 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details