தமிழ்நாடு

tamil nadu

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்தவும் குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : Sep 14, 2021, 5:52 AM IST

Published : Sep 14, 2021, 5:52 AM IST

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைக்க உத்தரவு
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைக்க உத்தரவு

மதுரை:ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பிணை மற்றும் முன்பிணை கோரிய சில மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, "முன்பிணை கோரியவர்கள் மீதான வழக்கிற்கு ஏற்ப அபராதத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பொது விநியோக திட்டத்தில் அரிசி வழங்கப்படுகிறது. ஆனால், அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதன் மூலம் பொது விநியோக திட்டத்திற்கான நோக்கமே வீணாகிறது.

சமையலுக்கு பயன்படுத்த முடியாத அளவுக்கு அரிசி தரமற்று இருப்பதால்தான் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனவே, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், தரமான அரசி வழங்குவதை உறுதிப்படுத்தவும் நுகர்பொருள் வாணிபக்கழகம், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பிரிவில் உயர் அலுவலர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இக்குழு அவ்வப்போது அரசுக்கு அறிக்கையளிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

ABOUT THE AUTHOR

...view details