தமிழ்நாட்டிலுள்ள சிறையில், காலியாக இருக்கும் கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மனு தாக்கல்செய்துள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சிறைகளில், 2018 முதல் 24 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கல் காலியாக உள்ளன. இப்பணி மிகவும் முக்கியமானது. சிறையில் கைதிகளை அனுமதிப்பது, விடுவிப்பது, வாரண்ட் தொடர்பான அனைத்துவித ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டியதும் இவர்களது பணி. ஜெயிலராகப் பணியாற்றுவோர் பதவி உயர்வின் மூலம் நியமிக்கப்படுவர்.
இதேபோல் சிறைகளிலும், கூர்நோக்கு இல்லங்களிலும் சமூகநல அலுவலர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால், மற்றப் பணிகளில் உள்ளவர்கள் கூடுதல் பணியைச் செய்ய வேண்டியுள்ளதால், வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.