தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரிய வழக்கு: உரிய உத்தரவு பிறப்பிக்க ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

mdu
mdu

By

Published : Feb 14, 2021, 6:25 AM IST

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நெய்தலூர் ஜல்லிக்கட்டு குழு சார்பில் விமல் பிரவீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், எங்கள் கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். 2016 வரை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பிறகு நடத்த அனுமதிக்கவில்லை. பிப்ரவரி 28இல் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம். இதுவரை அனுமதி தரவில்லை. எனவே, எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர்கள் கோரிக்கை குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், கால்நடைத் துறை செயலருக்கு பரிந்துரைக்க வேண்டும். அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கருக்கலைப்பிற்கான கால அவகாச வழக்கு: மத்திய குடும்பநலத் துறை பதில் மனு!

ABOUT THE AUTHOR

...view details