தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை பணிகளுக்கான டெண்டர்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு - தேர்தலுக்கு முன்பு சாலை பணிகளுக்கான டெண்டர்

மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் பகுதிகளில் தேர்தலுக்கு முன்பு விடப்பட்ட சாலை பணிகளுக்கான டெண்டரை ரத்து செய்யகோரிய வழக்கில், அரசு தரப்பில் 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

mdu
mdu

By

Published : Jun 25, 2021, 10:48 PM IST

நாகர்கோவில் தொகுதி முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "நாகர்கோவில் மண்டலம் கிள்ளியூர், ஏழுதேசம், கல்லுக்கூட்டம் ஆகிய 13 பேரூராட்சியில் சாலை வேலை ஒப்பந்த பணிகளுக்காக ரூ. 19 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தேர்தலுக்கு முன்பு ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பத்திரிகையில் வெளியிட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரூபாய் 2 கோடிக்கு மேல் ஒப்பந்தம் விடுவதற்கு,15 நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் அறிவிக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தம் 6 நாட்கள் முன்பு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய ஒப்பந்த அறிவிப்பு ஒரு சிலருக்கு சாதகமாக அரசு அலுவலர்கள் செயல்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இது போன்று ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கு விடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளது. சாலை மேம்பாட்டிற்கு விடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பு முறைகேடை சரி செய்ய உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே விதிமுறைகளை பின்பற்றாமல் விடப்பட்டுள்ள இந்த ஒப்பந்த அறிவிப்பு இரத்து செய்ய வேண்டும் இதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் " என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன்.25) தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி, சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பாக அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு பண ஒதுக்கீடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஒப்பந்ததாரருக்கு பணம் ஒதுக்கீடு செய்வது இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுபட்டது. அரசு தரப்பில் 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: துரைமுருகன் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details