தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை இடிக்கும் வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு - கரூர் நகராட்சி ஆணையர்

மதுரை: கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை இடிக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், கரூர் ஆட்சியர், நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை

By

Published : Jul 21, 2020, 12:03 PM IST

கரூரைச் சேர்ந்த செல்வ நன்மாறன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூரில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி கட்டடத்தை இடிப்பதாக கரூர் நகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பள்ளிக் கட்டடத்தை இடிக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆகவே, கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி கட்டடத்தை இடிக்கும் நகராட்சி ஆணையரின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்பதோடு, அதை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாகவும், கரூர் மாவட்டத்தில் மோசமான நிலையில் எத்தனை கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன? என்பது குறித்தும் கரூர் ஆட்சியர், நகராட்சி ஆணையர் புகைப்படங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details