தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என தெரிவிக்கமுடியாது - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றக்கிளை! - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

’ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது’ என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி

By

Published : Jun 7, 2022, 4:32 PM IST

மதுரை: திருச்சி துவரங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,

"துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சியின் பேருந்து நிலையம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பேருந்து நிலையம் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் அனைத்து ஆவணங்களிலும் காமராஜர் பேருந்து நிலையம் என்றே உள்ளது. இந்நிலையில் காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, காமராஜர் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது என அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது எனவும், காமராஜர் பேருந்து நிலையம் என்றே தொடரவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஊரின் பெயரை மாற்றுவது, பேருந்து நிலைய பெயரை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது. மெட்ராஸ், சென்னை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டோம். மாற்றங்களை ஏற்கப்பழக வேண்டும்" என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க:அண்ணாமலையையே திக்குமுக்காடச் செய்த சிவகங்கை பாஜக தொண்டர்கள்!

ABOUT THE AUTHOR

...view details