தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகமுத்து தற்கொலை வழக்கு: குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்த உத்தரவை திரும்பப் பெற்றது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை! - high court madhurai bench

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் அரசு தரப்பு 5 சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த ஓ.ராஜா தரப்பிற்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 10:29 AM IST

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்த நாகமுத்து, கடந்த 2012ஆம் ஆண்டு தற்கொலை செய்தார். தனது தற்கொலைக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் (தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்) சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளதாக நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ் புகார் அளித்தார். இதன்பேரில் ஓ.ராஜா உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் 5 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்தக் கோரிய ஓ.ராஜா தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதி இளங்கோவன், 5 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இதில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவிடப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி சுப்புராஜ் தரப்பில் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளங்கோவன், சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், இந்த வழக்கில் மனு மீதான விசாரணையை சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் பட்டியல் இட்டு விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரசு மக்கள் தொடர்பு அதிகாரி (GPRO) என அழைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details