தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை' - ஓபிஎஸ் - பிரதமரை சந்திக்க வாய்ப்பில்லை

பிரதமரை நேரில் சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை எனவும்; அவ்வாறு அமையும்பட்சத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன் எனவும் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 4, 2022, 7:09 PM IST

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக பிரமுகர் காதணி விழா இன்று (நவ.04) நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், 'அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், அதனை தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார்.

அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவும் அழிக்க முடியாத இயக்கமாக உருவாக்கினார். இருவரும் இணைந்து 50 ஆண்டுகள் அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக வளர்த்தனர். அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து மேலும் இந்த இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.

தொடர்ந்து, ஆளுநரை பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆளுநரின் செயல்பாடு எப்படி உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'ஆளுநரைப் பற்றி கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல' என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓபிஎஸ்

பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'பிரதமரை சந்திப்பதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அப்படி அமைந்தால் செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க:அண்ணாமலைக்கு பதில் சொல்லி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ரகுபதி

ABOUT THE AUTHOR

...view details