தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை - ஓ பன்னீர்செல்வம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் போது திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது நிரூபணமாகியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்

By

Published : Oct 24, 2021, 7:41 PM IST

மதுரை : தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்நோக்கி அதிமுக தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் போது, திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும், இது குறித்த குற்றச்சாட்டை அதிமுக தொடர்ந்து வைத்து வருவதாகவும் கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை - ஓ பன்னீர்செல்வம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details