மதுரை :தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலை மனதில் கொண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் என சீர்மரபினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த ராதாராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு தடை விதிக்கக் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருந்து வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மொத்தமாக 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.