மதுரை: முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா காமராஜரின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் 'அறிவு சுரபி' என்ற திறந்த புத்தக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. வடபழஞ்சி ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தின் சேர்க்கை மையத்தில், 'அறிவு சுரபி' எனும் திறந்த புத்தக நூலகத்தை மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார் திறந்து வைத்தார்.
இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பெங்களூரு இந்திய அறிவியல் கழக பேராசிரியர் கே.முனியப்பா, பேராசிரியர் எஸ்.சம்பத், முன்னாள் பேராசிரியர் த. தர்மலிங்கம் உயிரி தொழில்நுட்பவியல் துறை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் எம்.சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் கூறுகையில், “அறிவு சுரபி என்ற திறந்த புத்தக நூலகத்தில் பொது வாசிப்புக்கான பல்வேறு வெளியீடுகள் மற்றும் போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவ - மாணவியர்களுக்குத் தேவையான புத்தகங்கள் உள்ளன. மேலும், நன்கொடையாக பெறப்பட்ட பல்வேறு தலைப்புகள் அடங்கிய புத்தகங்களும் இங்கு உள்ளன.