மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அதிமுக தலைமையின் முடிவுதான் இறுதியானது. முத்தலாக் சட்டத்தை பிரதமர் மோடி அனைத்து இஸ்லாமிய பெண்களும் சமம் என்ற நோக்கத்தில் நிறைவேற்றியுள்ளார். அதனால் தனிப்பட்ட முறையில் நான் அதனை ஆதரிக்கிறேன் என்றார்.
நான் தனி ஆள் கிடையாது: ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பேட்டி! - மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
மதுரை: நான் என்னை தனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக எண்ணவில்லை. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பலம் நிறைந்த ஒருவனாகவே கருதுகிறேன் என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.ரவீந்திரநாத் குமார்
மேலும் அவர், என்னைப் பொறுத்தவரையில் நான் தனி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என நினைக்கவில்லை. ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பலம் நிறைந்த ஒருவனாகவே கருதுகிறேன். அடுத்தகட்ட பதவி குறித்து எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. தலைமை கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முயன்று வருகிறேன் எனத் தெரிவித்தார்.