தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா குறித்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி! - காமராசர் பல்கலைக்கழகம் செய்திகள்

மதுரை: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் போக்க காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

online-training-for-university-students-to-overcome-corona-fear-of-the-people
online-training-for-university-students-to-overcome-corona-fear-of-the-people

By

Published : Apr 18, 2020, 4:06 PM IST

கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகம் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், திட்ட அலுவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதற்காக அந்நிறுவனத்தின் இணையதள செயலி வழியாக ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் நடேசன், ஆசிரியர்கள், மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் துணைவேந்தர் கிருஷ்ணன் பேசுகையில், ''கரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்கள், குழந்தைகள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபர்கள் ஆகியோருக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது, அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வதற்காக இப்பயிற்சி நடக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் பெங்களூரு அமைப்பும் சேர்ந்து நமது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, அதன்மூலம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு வருகிறோம்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி

கரோனா வைரஸ் எப்பொழுது தோன்றியது, அதனால் என்ன அபாயங்கள் ஏற்படுகின்றன, இதனால் தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்படுகிறார், அவருடைய குடும்பம், பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது ஆகியவற்றைக் கொண்டு இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

மார்ச் 23ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறை தலைவருக்கும் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பாடத்தை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு வரும்வரை மாணவர்களுக்கு Zoom அப்ளிகேஷன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்படும்'' என்றார்.

இதையும் படிங்க:காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்: 6 பேர் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details