நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த சிலுவை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கரோனா ஊரடங்கில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நானும் எனது நண்பர்களும் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். எனவே கூடங்குளம் காவல் துறையினர் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில், நடைபாதையில் சீட்டு விளையாடினால் தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தடை செய்தது. இதன் மூலம் பல்வேறு தற்கொலைகள், குடும்பத்தின் வறுமையை போக்கப்பட்டு உள்ளது.