தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிபி உத்தரவு எதிரொலி: மதுரையில் ரவுடிகள் மீது தொடரும் நடவடிக்கை - madurai latest news

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் துறை மாநகரில் உள்ள 235 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

rowdies-in-madurai
rowdies-in-madurai

By

Published : Sep 24, 2021, 6:53 PM IST

மதுரை:தமிழ்நாட்டின் டிஜிபி சைலேந்திரபாபு ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து போன்றவைகளை ஒழிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில குற்றச்செயல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது ரவுடியிசத்தை மொத்தமாக ஒழிக்கும் வகையில் ஸ்டிங் ஆபரேஷனை முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலைவரை காவல் துறையினர் ரெய்டு நடத்தினர்.

235 ரவுடிகள் மீது நடவடிக்கை

அந்த ரெய்டில் மதுரையில் இதுவரை 235 மதுரை மாநகர காவல்துறை மாநகரில் உள்ள 235 ரவுடிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட ரவுடிகள் மீதான தீவிர நடவடிக்கையில் மதுரை மாநகரில் மட்டும் 235 ரவுடிகள் நேரடியாகத் தணிக்கை செய்யபட்டனர்.

அவர்களில் 25 ரவுடிகள் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர்களிடமிருநது 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட இருவர் கைது செயயப்பட்டனர். 19 ரவுடிகள் மீது குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக நன்னடத்தை பிணையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை மாநகரில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details