மதுரை: ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில், மாணிக்கம் என்ற பெயருடைய ஒரு வயது ஆண் குழந்தை ஜூன் 13ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அக்குழந்தை நேற்று (ஜூன்.29) பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.