தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா - one new corona positive case reported at Madurai

மதுரை : இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை
மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

By

Published : Jun 2, 2020, 8:48 PM IST

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. மதுரை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பிற மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து வரும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அங்கு துரித கதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அம்மருத்துவமனையில் இதுவரை 268 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் இன்று புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இவர்களில் 174 பேர் இதுவரை பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், மூன்று பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர, தற்போது மொத்தம் 92 பேர் இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க :நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கு - தற்போதைய நிலையே தொடர உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details