மதுரையில் உள்ள அரசு ராசாசி மருத்துவமனையில் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
நேற்று வரை 90 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று கூடுதலாக ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை மொத்தம் 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மதுரையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 43 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 46 பேர் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மதுரையில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட அல்லது பரிசோதனைக்கு வருகின்ற நோயாளிகளைத் தவிர அதிக நபர்கள் வருவதைத் தடுக்க அந்த மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக சுகாதாரத்துறையும், மதுரை மாநகராட்சியும் அறிவித்துள்ளன.
இதனால் அப்பகுதி முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.