மதுரை:மதுரை மாவட்டத்தில் தை 1ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மற்றும் மஞ்சு விரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதன்படி, நேற்று (ஜனவரி 15) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிவடைந்தது. இன்று (ஜனவரி 16) பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், எலியார்பத்தியில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு விடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த போட்டியை நடத்த அனுமதிக்கவில்லை. இந்த நிலையில்., காவல் துறைக்குத் தெரியாமல் கிராம சாஸ்திரத்திற்கு 3 அல்லது 4 ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டு மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவது வழக்கம்.
அதேபோல் இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எலியார்ப்பத்தி கிராமத்தில் நடைபெற்ற கிராம மஞ்சுவிரட்டு போட்டியில் காளை ஒன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த நபரின் இடது பக்க மார்பில் குத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் படுகாயம் அடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு வரும் வழியில் உயிரிழப்பு.