தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகன்கள் கைவிட்டதால் தற்கொலை செய்துகொண்ட தம்பதி - தற்கொலை செய்துகொண்ட தம்பதி

மதுரை: சமயநல்லூரில் மூன்று மகன்கள் இருந்தும் வயதான காலத்தில் தங்களை பராமரிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டனர்.

http://10.10.50.85:6060/reg-lowres/27-June-2020/tn-cbe-03-pollachi-dmk-photographer-help-vis-tn10008_27062020201223_2706f_1593268943_196.mp4
oldage couples commit suicide in madurai

By

Published : Jun 28, 2020, 4:25 PM IST

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியை சேர்ந்த மச்சக்காளை - பசுபதி தம்பதியினர் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது மூன்று மகன்களும் திருமணமாகி தனித்தனியே மதுரை, கோயம்புததூர், சவுதி அரேபியா ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

மூன்றாவது மகன் மதுரையிலே இருந்தும் பெற்றோர்களை உடன் வைத்து பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும், மூன்று மகன்களில் ஒருவர்கூட உணவிற்கு எவ்வித பணமும் அளிக்காமல் இவர்களை நிராகரித்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த தம்பதியினர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவல் அறிந்த சமயநல்லூர் காவல் துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலைக்கான காரணம் குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details