மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி திருநாவுக்கரசு என்பவர், நேற்று கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை சாலையில் தனது காரில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது கார், அந்த சாலையில் தறிகெட்டு ஓடியுள்ளது.
சாலையில் தறிகெட்டு ஓடியதால் நடைபாதையில் ஏறிய கார் - மூதாட்டி உயிரிழப்பு - Old women died in an car accident
மதுரை: கோரிப்பாளையம் அருகே சாலையில் தறிகெட்டு ஓடிய கார் நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
![சாலையில் தறிகெட்டு ஓடியதால் நடைபாதையில் ஏறிய கார் - மூதாட்டி உயிரிழப்பு car Accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5294455-thumbnail-3x2-accident.jpg)
பின்னர் அடுத்தடுத்து இரு சக்கர வாகனம், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சாலை அருகே நடைபாதையில் அமர்ந்திருந்த மூதாட்டி மீது மோதிய அந்தக் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். உயிரிழந்த மூதாட்டியின் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.