தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்குப்பாலியல் தொந்தரவு செய்த முதியவர்: ஆயுள் தண்டனை விதித்து அதிரடிகாட்டிய நீதிமன்றம் - சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை அருகே 14 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த 54 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை

By

Published : Aug 10, 2022, 8:49 PM IST

மதுரை: பேரையூர் அருகே உள்ள கூவல்புரத்தைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் (54). இவர் மீது 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவானது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் (POCSO) அடிப்படையில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பவுன்ராஜுக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் சிறப்பாகப் பணியாற்றி நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத் தந்த காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பாராட்டினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:இரண்டு நாள்கள் விசாரணைக்குப்பிறகு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்!

ABOUT THE AUTHOR

...view details