மதுரை சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (66). இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழு வயது சிறுமிக்குப் பாலியல் வன்புணர்வு செய்து துன்புறுத்தியதாகக் கூறி, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் இவரைக் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாயார் அருகே உள்ள கடைக்குச் சென்ற சூழலைப் பயன்படுத்தி, சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், ஏற்கனவே சிறுமி தனியாக இருந்தபோது, அவரை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.