மதுரை செல்லூர் பகுதி கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது பிள்ளைகள் சென்னையிலும் மதுரையிலும் வசித்து வருவதால் ஆண்டாள் செல்லூர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
மர்மமான முறையில் மூதாட்டி மரணம்: நகைக்காக கொலையா? - மரணம்
மதுரை: மர்மமான முறையில் மூதாட்டி மரணம் நகைக்காக கொலையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
old woman
இந்நிலையில் உறவினர்கள் நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு வெளிப்பக்கம் தாழிட்டு மூதாட்டி உள்ளே இறந்து கிடந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பணம், நகைக்காக கொலை நடந்துள்ளதா? இயற்கை மரணமா என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.