ராமநாதபுரம் மாவட்டம், R.S. மங்கலம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி, சமஸ்கிருதம் என 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 7 ஆயிரம் தலைப்புகள் கொண்ட ஓலைச்சுவடிகள் உள்ளன.
இந்த நூலகத்தில் பழமையான புத்தகங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் உள்ளிட்டவை போதிய பராமரிப்பின்றி உள்ளன. எனவே, அவற்றை பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்த வேண்டும். அதை பொதுமக்களின் பார்வைக்காக இணையதளம் உள்ளிட்ட பொது வெளியில் காட்சிப் படுத்த வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.