தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடினால் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு: உயர்நீதிமன்ற கிளை அதிரடி - justice PT Aasha

கோவில் நிகழ்சிகளில் ஆபாச நடனம் ஏற்பாடு செய்பவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி P.T.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.

ஆபாச நடனம் நடத்தினால் கடும நடவடிக்கை
ஆபாச நடனம் நடத்தினால் கடும நடவடிக்கை

By

Published : Jun 20, 2023, 11:05 PM IST

மதுரை:அரசகுளத்தைச் சார்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தன்னுடைய ஊரில் கோவில் விழாவில் நிகழ்ந்த ஆபாச நடன விழா குறித்து புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் "எங்கள் கிராமத்தில் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது இந்தக் கோவில் இந்து அற நிலையத் துறையின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் தனிநபர் யாருக்கும் எந்த முதல் மரியாதையும் கிடையாது அனைவருக்கும் பொதுவான கோவிலாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது சிலர் தங்களுக்குச் சொந்தமான கோவில் என்றும் சிலருக்கு மட்டுமே முதல் மரியாதை எனப் பிரச்சனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற பங்குனி உற்சவ விழாவில், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர் நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகள் விதித்துக் குறிப்பாக 'ஆபாச நடனங்கள்' இருக்கக் கூடாது என நிபந்தனைகள் விதித்து அனுமதி கொடுத்திருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 1/04/23 அன்று நடைபெற்ற ஆடல் பாடலில் மிகவும் ஆபாசமாகவும் அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எனவே இந்த விழா ஏற்பாடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி P.T ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கணபதி சுப்ரமணியன் ஆஜராகி, கோவில் திருவிழா அன்று ஆபாச நடனம் ஆடியதற்கான புகைப்படங்கள், காணொளி காட்சிகளை நீதிபதி முன் தாக்கல் செய்தார்.

இதனைப் பார்த்த நீதிபதி P.T ஆஷா கடும் கோபம் அடைந்து, ஒரு கோவில் திருவிழாவில் இவ்வளவு மோசமாக ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பினார். கோவில் என்பது இறை வணக்க வழிபாட்டுக்குப் பொதுமக்கள் வரக்கூடிய இடத்தில் இவ்வளவு ஆபாசமான நடனங்களை ஆடும் போது காவல்துறை என்ன செய்தது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆபாச நடனம் குறித்து இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்த முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதனைப் பார்த்த நீதிபதி P.T ஆஷா, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு இந்த நடனங்கள் உள்ளது, ஆனால் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது எனவே விழா ஏற்பாடுகள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளனர்.

இதையும் படிங்க:மோசடி வழக்கில் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டுகள் சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details