மதுரை அரசு ராசாசி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சிப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு பயிலும் மாணவிகளில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவிலியர் பயிற்சி மாணவிகள் மூவருக்கு கரோனா தொற்று - ராசாசி அரசு மருத்துவமனை
மதுரை: ராசாசி அரசு மருத்துவமனையின் செவிலியர் பயிற்சிப் மாணவிகள் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் 3 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ராசாசி மருத்துவமனை செவிலியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவிகளுக்கும் கரோனா தொற்று உறுதியானது மாணவியரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மாணவி தங்கியிருந்த செவிலியர் விடுதியின் முதல் தளம் மூடப்பட்டு, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாணவர்கள் இருக்கும் அறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் செவிலியர் பயிற்சி மேற்கொள்ளும் அனைத்து மாணவியருக்கும் கரோனா பரிசோதனை நடத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.