மதுரை கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகர். இவர் ஜடாமுனி கோவில் தெருவில் சொந்தமாக ஜவுளி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு, குடோன் சாவியை ஊழியர் சுரேஷ் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சாவியை எடுத்துக் கொண்டு சுரேஷ் தனது அறைக்குச் சென்றுள்ளார்.
ஆதரவு கொடுத்தவரை சிக்க வைக்க முயன்ற வடமாநில இளைஞர்..!
மதுரை: ஆதரவு கொடுத்தவரை திருட்டு வழக்கில் சிக்க வைத்த வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடோன் சாவியுடன் வந்திருப்பதை அறிந்த சுரேஷின் அறை நண்பரான சுமேர்சிங், சாவியை திருடி குடோனில் இருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள ஜவுளிகளை திருடிச் விட்டு, மீண்டும் சாவியை சுரேஷ் அறையில் வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் திங்கட்கிழமை காலையில் மனோகர் குடோனை திறந்து பார்த்த போது ஜவுளிகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர், குடோனில் இருந்த காணொளி காட்சிகளை ஆய்வுச் செய்த போது சுமேர்சிங் ஜவுளிகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
பின்னர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் வழக்குப் பதிவுச் செய்த காவல்துறையினர் தப்பிச் சென்ற வடமாநில இளைஞரை இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடைக்கலம் கொடுத்தவரையே திருட்டு வழக்கில் சிக்க வைத்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.