மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் வசித்து வருபவர் வட மாநில இளைஞர் பிஸ்வாஜீட் மாண்டல் (28). மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தெற்காவணி மூலவீதியில் உள்ள பட்டறையில் நகை வடிவமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது இவருக்கு சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது. பின்னர் வீட்டின் அருகேயுள்ள மருத்துவரை அணுகி அவர் கையில் கட்டுப் போட்டார்.
வட மாநில இளைஞருக்கு உடல் உபாதை கட்டை அவிழ்த்த பிறகு அவரின் விரலில் அலர்ஜி ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு கொடுத்த மருந்தை உட்கொண்டதால் உடல் உபாதை ஏற்பட்டது. தற்போது பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இளைஞர் கூறியதாவது, "உடல் உபாதை இன்னும் சரியாகவில்லை. இதுவரை மருத்துவத்திற்காக மட்டும் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: உடல் உபாதை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர்!