மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேஷ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொசுவால் டெங்கு மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட பலவித நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை இல்லை.
எனவே, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதிக திறன் கொண்ட மருந்துகளைப் பயன்படுத்தி கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கொசு கட்டுப்பாட்டு மையத்தில் நிரந்தர ஊழியர்களை நியமிக்கவும், டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட கொசுவால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சையாக்கத் தேவையான மருந்து வசதிகளுடன் தனி வார்டு வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நல்ல தண்ணீரிலும், கழிவு நீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் கொசு ஒழிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.