தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10 பேருக்கு மேல் பயணிக்கும் ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானால் நிவாரணம் கிடையாது: நீதிபதிகள் திட்டவட்டம் - no relief for those whose share auto run with 10 passengers

மதுரை: ஷேர் ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் நிவாரணம் வழங்க இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

By

Published : Dec 7, 2020, 3:09 PM IST

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை நகர் பகுதியில் ஆட்டோக்களில் 3 நபர்களை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி உள்ளது. சில ஆட்டோக்களில் 10 முதல் 12 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் ஆட்டோக்கள் விபத்துக்குள்ளாகின்றன. தவிர பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மதுரை நகர் பகுதியில் 2019ஆம் ஆண்டுவரை 5017 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் ரூ 4 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றி செல்வதை நிறுத்தவில்லை.

போக்குவரத்து விதியை மீறி அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் இன்று (டிச.7) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், மதுரை நகர் பகுதியில் 16 ஆயிரத்து 200 ஆட்டோக்கள் தற்போது ஓடுகின்றன. 2016-2019ஆம் ஆண்டுவரை 1065 ஆட்டோக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், ஆட்டோக்களில் 10 நபர்களுக்கு மேல் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இயலாது. தமிழ்நாட்டில், குறிப்பாக மதுரையில் எத்தனை ஆட்டோக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, காவல் துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் பெயரில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன, தமிழ்நாடு முழுவதும் எத்தனை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்உள்ளன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விதிகளை மீறி செயல்படும் எத்தனை ஷேர் ஆட்டோகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details