தமிழ்நாட்டில் வருகிற 27, 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் மதுரை உச்சப்பட்டி, கப்பலூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களையும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்குகள் சேகரித்தார்.
’குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பும் இல்லை’ - அமைச்சர் ஆர்பி உதயகுமார்!
மதுரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் 100 விழுக்காடு வெற்றிகளை பெறப்போவது உறுதி. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை. சட்டம் முழுமையாக செயல்படுத்தும்போதுதான் அதற்கான நன்மைகள் நமக்கு தெரியவரும். ஆனால், கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தியும் மாணவர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் வகையில் போராட்டத்தை தூண்டியும் விடுகின்றனர்.
கமல்ஹாசன் திமுகவோடு சேர்ந்தாலும் யார் யாரோடு சேர்ந்தாலும் அதிமுகவின் வெற்றி 100 விழுக்காடு உறுதி. அதிமுக என்னும் பெரும் இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது என்பது உண்மையிலும் உண்மை. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அதிமுகவை பொங்கல் பரிசு கொடுக்க விடாமல் எதிர்கட்சி சதி செய்துவருகிறது” என்று கூறினார்.