மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் பல்நோக்கு சிகிச்சை மைய வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவு இயங்கிவருகிறது.
இங்கு பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிலிருந்து வரும், கரோனா பாதிப்பு அறிகுறிகள் கொண்ட நபர்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
அந்த வகையில் இங்கு கரோனா பாதிப்பிற்குள்ளாகி இதுவரை மொத்தம் 231 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 118 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வீடு திரும்பியவர்கள் தவிர்த்து, தற்போது மொத்தம் 111 பேர் இம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மதுரையில், வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவந்த நிலையில், புதிதாக எவரும் பாதிக்கப்படாதது அப்பகுதியினரை சற்று நிம்மதியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க :அணில் குஞ்சுகளை கைவிட்ட தாய்: பாலூட்டி வளர்க்கும் மருத்துவர்