மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையதிற்கு அருகே எஸ்பிஐ (SBI) வங்கியின் ஏடிஎம் (ATM) உள்ளது. அங்கு மின்விளக்குகள் இல்லாததால் பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்களுக்குக் கரோனா நோய்த் தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஏடிஎம்மில் மின்விளக்குகள் இல்லை: கரோனா அதிகரிக்கும் அபாயம்! - No lights in atm at madurai
மதுரை: திருமங்கலம் அருகே எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்மில் மின்விளக்குகள் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்குக் கரோனா நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏடிஎம்மில் மின்விளக்குகள் இல்லை
தமிழ்நாட்டின் தென்மாவட்டமான மதுரையில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஏடிஎம்களில் முறையாக அரசின் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.
திருமங்கலம் ஏடிஎம்மில் மின்விளக்குகள் வசதி இல்லாததால், பணம் எடுக்கவரும் வாடிக்கையாளர்கள், அங்குள்ள பொத்தான்கள் முழுவதையும் வெறும் கையாலேயே தொட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இதனால் அடுத்தடுத்து வரும் வாடிக்கையாளர்களும் அதிலேயே கை வைக்கும் நிலை உள்ளதால் மதுரையில் உள்ள ஏடிஎம்களில், அதற்கான வங்கி நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டு, பிரச்னைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!