தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் இல்லை” - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - Madurai District News

மதுரை: தமிழ்நாட்டில் விளை பொருட்களின் விளைச்சல் அதிகமாக உள்ளதால், அத்தியாவசிய பொருள்கள் விலையில் ஏற்றம் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அமைச்சர் ஆர் பி உதயகுமார்
அமைச்சர் ஆர் பி உதயகுமார்

By

Published : Apr 30, 2020, 8:22 PM IST

மதுரை ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள 24 மணிநேர கரோனா கட்டுப்பாட்டு மையத்தில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கின்ற காரணத்தால் வெளியே வருகின்ற பொதுமக்கள் நிதானமாகவும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுவித்தார்.

மேலும், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலையில் எந்த வித ஏற்றமும் இல்லை. காரணம் நெல் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து விளை பொருட்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்றம் இல்லை
ஆனால் இதுகுறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய இருப்பை காண்பிப்பதற்காகவும், அரசியல் களத்தில் காணாமல் போய்விடுவோம் என்பதற்காகவும், தினமும் தனது கட்சிக்காரர்கள் உடன் மட்டுமே வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பேசிவருகிறார் என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனாலும் கூட வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகின்ற காரணத்தால் பொதுமக்கள் கண்டிப்பான முறையில் அரசின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
தற்போது கரோனா வைரஸ் பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஊரடங்கினால் சோர்ந்துபோன சாலையோர வியாபாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details