மதுரையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 84 நபர்கள் பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பினர். அத்துடன் இன்றக்கு உயிரிழப்புகளும் ஏதும் இல்லை. புதிதாக 73 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் குறையும் கரோனா பாதிப்பு! இன்று உயிரிழப்புகள் இல்லை - கரோனா பாதிப்பு எண்ணிக்கை மதுரை
மதுரை: மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இன்று (அக.16) 73 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா நிலவரம் இன்று
கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 17 ஆயிரத்து 874 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 668 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தற்போது வரை 804 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 402 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: நவம்பர் மூன்றாவது வாரத்தில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்பு!