மதுரை:மதுரையில் இன்று (அக்.11) காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர், முகமது தாஜுதீன். இவர் வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வகுத்ததே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பினைச் சேர்ந்த தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் நபர்களிடம் இவர் தொடர்பில் இருந்தாரா என அவரது வீட்டில் டெல்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.