தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அவரது மகன் மீது வழக்குப்பதிவு

மதுரை: 144 தடையை மீறி புதிய தமிழகம் கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அவரது மகன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

krishnasamy
krishnasamy

By

Published : Jan 7, 2021, 7:03 PM IST

மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை பொதுப்பெயராக அறிவிக்கும் அரசாணையை வெளியிட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

தேவேந்திர குல சமூகத்தினருக்கு ஒரு பிரச்னை என்றால் யாரும் வரமாட்டார்கள். ஆனால், பதவிக்காக பல்வேறு கட்சிகளில் அடிமைகளாக இருந்து வருகிறார்கள் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றதாகக் கூறி கிருஷ்ணசாமி, அவரது மகன் ஷாம் கிருஷ்ணசாமி, அக்கட்சியின் 17 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் மீது மதுரை சுப்ரமணியபுரம் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:'பட்டியல் இன வெளியேற்ற அரசாணை பிறப்பிக்கும்வரை ஓயப்போவதில்லை'- கிருஷ்ணசாமி

ABOUT THE AUTHOR

...view details