தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 28, 2021, 8:00 PM IST

ETV Bharat / state

ரயில் பயணிகளுக்கென புதிய செயலி!

ரயில் பயணிகள் தங்கள் குறைகளைக் கண்டறிந்து துரிதகதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு வசதியாக புதிய செயலி ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

rail passengers  new railway application  railway app  new railway app  rail  new app  madurai news  madurai latest news  மதுரை செய்திகள்  ரயில் பயணிகளுக்கான புதிய செயலி  புதிய செயலி  ரயில்வே
train

மதுரை:ரயில் பயணிகளின் புகார்கள், ஆலோசனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ரயில் மதாத் (MADAD - Mobile Application for Desired Assistance During travel) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களது புகார்களை தொலைபேசி, இணையதளம், சமூக ஊடகம் ஆகியவற்றின் வாயிலாக பதிவு செய்கிறார்கள். இந்நிலையில், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உடனடி நடவடிக்கை எடுக்கவே இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

24x7 சேவை

இந்தச் செயலி 24 மணி நேரமும் செயல்படும். தமிழ் மொழி உள்பட 12 மொழிகள் மூலம் இந்தச் செயலியை பயன்படுத்த முடியும். இதனை இணையதளம், குறுஞ்செய்தி, சமூக ஊடகம், உதவி எண் 139 ஆகியவற்றின் மூலம் அணுகலாம்.

இதன் மூலம் பாதுகாப்பு, மருத்துவ உதவி, விபத்து பற்றிய தகவல்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்களுக்கான உதவிகள், பொதுவான புகார்கள், லஞ்சப் புகார்கள், பார்சல், சரக்கு போக்குவரத்து பற்றிய விசாரணை, ஐஆர்சிடிசி இயக்கும் ரயில்கள் பற்றிய விவரங்கள், ஏற்கனவே அளித்த புகாரின் நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

இதில் புகார்கள் குறித்து விரைவான நடவடிக்கை எடுத்து பதிலும் அளிக்கப்படும். இந்தச் செயலியை பயன்படுத்த முடியாத அவசர காலங்களில் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர், நிலைய அலுவலர், பணியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை, அரசு ரயில்வே காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details