தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Bakrid: பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடு வெட்ட தடை கோரிய மனு.. நீதிமன்ற உத்தரவு என்ன?

பக்ரீத் பண்டிகையின்போது ஆடு, மாடுகளை பலியிட தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில், தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது

பக்ரீத் 2023
பக்ரீத 2023

By

Published : Jun 26, 2023, 6:53 PM IST

Updated : Jun 27, 2023, 8:17 AM IST

மதுரை:திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், "இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் (Eid al-Adha) பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் குருபானி என்ற பெயரில் ஆடு மாடுகளை வாங்கி பலியிட்டு வருகின்றனர்.

இதேபோல் இந்த பண்டிகையின் போது, சட்டவிரோதமாக மாடுகளை வாங்கி வந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுத்து பலியிட்டு வருகின்றனர். இது ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகின்றது. இது பெரிய அளவில் வணிகமாக நடைபெற்று வருகின்றது.

திருச்சி மாநகரில் இதுபோன்று பலியிடுவதற்கு மாநகராட்சி சார்பாக ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதியை மீறி, சட்ட விரோதமாக நூற்றுக்கும் அதிகமான இடங்களில், தெருக்களில் இதுபோன்று பலியிட்டு வருகின்றனர். (Eid al-Adha) பக்ரீத் குருபானி என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்த செயல் அதிகரித்து வருகின்றது.

கால்நடைகள் பலியிடுவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளையும் வழிமுறைகளையும் வகுத்துள்ளது. ஆனால் அதனை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை இதனால் கால்நடைகள் அதிக அளவில் சட்டவிரோதமாக பலியிடப்பட்டு வருகின்றன. எனவே மதத்தின் பெயரால் விலங்குகள் பலியிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக அனுமதி இல்லாத இடங்களில் ஆடு மாடுகளை அறுத்து, பலியிட தடை விதிக்க வேண்டும் என" மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் வாதிடும் போது, ஆடு மாடுகளை இஸ்லாமியர் சட்டவிரோதமாக மாநகராட்சி அனுமதி இல்லாத இடங்களிலும் அறுத்து பலியிட்டு வருகின்றனர், இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்பொழுது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி, நீங்கள் தாக்கல் செய்யக்கூடிய புகைப்பட ஆவணங்கள் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஆனால் வழக்கை பக்ரீத் நெருங்கக்கூடிய சூழலில் தாக்கல் செய்து உள்ளீர்கள், ஏன் கால தாமதமாக மனுக்களை தாக்கல் செய்தீர்கள்.

உடனே நடவடிக்கை எடுங்கள் என்றால் எவ்வாறு எடுக்க முடியும், கடைசி நேரத்தில் வந்த காரணம் என்ன..? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுபோன்று தடை விதிக்க முடியாது எனக்கூறி, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் தரப்பிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தரப்பிலும் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை மாதம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பெருங்களத்தூர் மேம்பாலத்தை திறக்க முதலமைச்சர் உத்தரவு!

Last Updated : Jun 27, 2023, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details