தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மாணவரின் தந்தை ஜாமின் மனு தள்ளுபடி!

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தை ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

By

Published : Nov 18, 2019, 6:55 PM IST

NEET

இது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக மாணவன் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி மாணவன் மற்றும் , அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மருத்துவர் வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்கக் கோரி கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்,விசாரணையில், ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வெங்கடேசனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, எனவே மேல் சிகிச்சை அளிக்க வேண்டி இருப்பதால் வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி மீண்டும் ஒரு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் மாணவன் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பான விசாரணை இன்னும் முடியடையவில்லை. இந்நிலையில் தற்போது வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்கினால் வழக்கு விசாரணையில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வெங்கடேசனுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவரின் தந்தை மருத்துவர் வெங்கடேசனின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நாளை தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details