நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக கூறி சிபிசிஐடி காவல் துறையினர், சென்னை கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை தேடி வருவதாகவும் எங்களுக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லாத பட்சத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளித்தால் தங்களுக்கு முன் ஜாமின் வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்திருந்தனர்,