தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித்சூர்யா, அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது தந்தை மருத்துவர் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் மோசடி குற்றத்திற்காக தேனி சிபிசிஐடி காவல துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த வாரம் உதித்சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிணை வழங்கி உத்தரவிட்டது.