மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் முன்பாக தேசிய மாணவர் படை (மகளிர் பிரிவு) NCC மாணவிகள், பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடல்கள் பாடியும் நடு வீதியில் நாடகங்கள் நடித்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொது இடங்களில் எவ்வாறு பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் மாணவிகள் நடத்திய நாடகம் திருப்பரங்குன்றம் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.