தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை முதல் தொடங்கும் நவராத்திரி விழா - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை (அக்.17) முதல் நவராத்திரி விழா தொடங்குவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன் கோயில்

By

Published : Oct 15, 2020, 7:19 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழா சனிக்கிழமை (அக். 17) தொடங்கி, வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு பக்தர்கள் நேரில் தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நவராத்திரித் திருவிழா சனிக்கிழமை (அக். 17) தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி முதல்நாளான சனிக்கிழமை மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 18ஆம் தேதி வாதவூர் அடிகளுக்கு உபதேசம், 19ஆம் தேதி சுவாமி தன்னைத்தானே பூஜித்தல், 20ஆம் தேதி விறகு விற்றல், 21ஆம் தேதி கடம்பவன வாசினி, 22ஆம் தேதி வேல்வனை செண்டு தொடுத்தல், 23ஆம் தேதி அருள்மிகு மீனாட்சி பட்டாபிஷேகம், 24ஆம் தேதி மகிஷாசூர மர்த்தினி, 25ஆம் தேதி சிவபூஜை அலங்காரங்களில் காட்சியளிப்பார்.

நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 17ஆம் தேதிமுதல் 25ஆம் தேதிவரை உபயத் திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியவை நடைபெறாது.

கொலு உற்சவ நாள்களில் தினசரி மாலை 4 முதல் 5.30 மற்றும் இரவு 6.45 முதல் 8 மணி வரை மீனாட்சி அம்மனை மூலஸ்தான சன்னதியில் தரிசனம் செய்யலாம். இடைப்பட்ட நேரமான மாலை 5.30 முதல் 6.45 வரை மீனாட்சி அம்மனுக்கு மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு திருமுழுக்கு அலங்காரம், கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும்.

இந்தத் திருமுழுக்கு அலங்காரங்கள் நடைபெறும் நேரத்தில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவர் அம்மனை தரிசிக்க பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உற்சவத்தில் முதல்நாள் அலங்காரத்தில் உள்ள அம்மனைத் தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு மறுநாள் காலை 6 முதல் 7 மணி வரை அம்மனைத் தரிசிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற பிரதோஷம் - ஏழு மாதங்களுக்குப் பிறகு கலந்துகொண்ட பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details