தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே பாரதத்தை உணர்த்தும் வகையில் கலாசார நடனம் இருந்தது -  அமைச்சர் செல்லூர் ராஜூ!

மதுரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

National Integration Program
National Integration Program

By

Published : Jan 24, 2020, 11:00 PM IST

மதுரை திருப்பரங்குன்றத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பாக ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் தேசிய ஒருமைப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய், அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமை வகித்து தொடங்கிவைத்தனர்.

இதில், பீஹார், கர்நாடகா, மணிப்பூர், கவுகாத்தி தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் நடன கலைஞர்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக ஆடி பாடி திறமையை வெளிப்படுத்தினர்.

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்," நாட்டின் ஒருமைப்பாட்டை போற்றும் வகையில் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை உணர்த்தும் வகையில் பாரம்பரிய கலாசார நடனம் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்றார்.

இதையும் படிங்க: மீனவர் வலையில் சிக்கிய 15 அடி நீளமுடைய ராட்சத சுறா

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details